எங்கு சென்றாலும் கழிப்பறையை எடுத்து செல்லும் வடகொரிய அதிபர்! பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
வடகொரியா அதிபர் கிம் ஜாங், எந்த நாட்டுக்கு சென்றாலும் கழிப்பறையை கூடவே எடுத்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் அதிபராக விளங்கி வருபவர் கிம் ஜாங். இவர் வடகொரிய அதிபராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததுடன் சமீபத்தில் தனது தந்தையின் 10வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி 11 நாட்களுக்கு யாருமே நாட்டில் சிரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
வடகொரியா ஒரு வினோதமான நாடாக உள்ளது. ஏனெனில் மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை அதிபர் தான் முடிவு எடுப்பாராம். இந்நிலையில் இவரை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவர் எந்த நாட்டுக்கு சென்றாலும் கூடவே கழிப்பறையும் எடுத்து செல்வதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து வடகொரியா கமாண்டோ பிரிவின் முன்னாள் ஊழியர் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் கிம் ஜாங் பொதுக்கழிவறைகளை பயன்படுத்துவதை சில காலமாகவே நிறுத்திவிட்டார். அவர் Portable Toilet ஒன்றை வடிவமைத்து அதை மட்டும் தான் பயன்படுத்துகிறார். எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்த டாய்லெட்டை அவர் கையோடு எடுத்துச் செல்வதோடு யார் இந்த டாய்லெட்டை பயன்படுத்தினாலும் அல்லது தொட்டாலும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மலத்திலிருந்து தனது உடல்நலம் பற்றிய விஷயங்கள் வேறு யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு அவர் செய்கிறார். தனது மலம் தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டால் அதனால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என கிம் ஜாங் கருதுவதாக அவர் தெரிவித்தார்.