Kinetic-ன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்., Kinetic Green Zulu விலை, அம்சங்கள் இதோ
Kinetic நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் வழக்கமான எரிபொருள் வாகனங்களுடன் மின்சார ஸ்கூட்டர்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த வரிசையில், Kinetic நிறுவனத்தின் புதிய Electric Scooter சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Kinetic Green Zulu
இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Kinetic Green Zulu என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கைனடிக் நிறுவனத்திற்கு இந்தியாவில் நல்ல பிராண்ட் அங்கீகாரம் உள்ளது. Honda நிறுவனத்துடன் இணைந்து Honda Kinetic ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் மாறிவரும் காலத்துக்கு ஏற்ப கைனெடிக் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வந்துள்ளது.
Green Zulu என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன மாதிரியான அம்சங்கள் இருக்கும்? விலை எவ்வளவு? இது போன்ற முழு விவரங்களைப் பார்ப்போம்..
Kinetic Green Zulu அம்சங்கள்
Kinetic Green Zulu எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் LEDHeadlamp மற்றும் handlebar stakeல் DRL போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட்டி தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்களைப் பொறுத்தவரை, ஸ்கூட்டரின் நீளம் 1,830 மிமீ ஆகும். அகலம் 715 மிமீ. உயரம் 1,135 மிமீ. Wheelbase 1,360 மிமீ. Ground Clearance 160 மிமீ. மேலும் ஸ்கூட்டரின் மொத்த எடை 93 கிலோ. 150 கிலோ எடை வரை சுமக்க முடியும்.
பேட்டரி, டாப் ஸ்பீட் மற்றும் ரேஞ்ச்
பேட்டரியைப் பொறுத்தவரை, இது 2.27 KWh Lithium-Ion பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 0-80 சதவிகிதம் சார்ஜிங் வெறும் 30 நிமிடங்களில் முடிவடையும் என்பது தனிச்சிறப்பு என்று சொல்லலாம்.
இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 104 கிமீ பயணிக்கும். மேலும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
இதில் Dual Disc Brakes கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு, இந்த மாடலில் Oil Cooled Battery Option கொண்டு வர உள்ளனர். இதன் மூலம் ஸ்கூட்டர் Range மேலும் அதிகரிக்கும்.
Kinetic Green Zulu விலை
Kinetic Green Zulu எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையைப் பொறுத்தவரை, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 95,000 நிர்ணயிக்கப்பட்டது. அடுத்த 12 மாதங்களில் குறைந்தது 40,000 ஸ்கூட்டிகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
Ola S1 X+, Okinawa Prizepro மற்றும் பல மாடல்களுக்கு போட்டியாக Kinetic இந்த ஸ்கூட்டியை கொண்டு வந்தது.
Emi-ல் Kinetic Green Zulu E-Scooter
இ-காமர்ஸ் இணையதளங்களான Flipkart மற்றும் Amazon ஆகியவற்றிலும் இந்த ஸ்கூட்டர் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ரூ. 69,000 செலுத்த வேண்டும், மேலும் ரூ. 800 மாதாந்திர EMI செலுத்தி இ-ஸ்கூட்டரை பயன்படுத்த முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Kinetic Green Zulu E-Scooter, Kinetic Electric scooter, Electric vehicles, Electric Scooters in Amazon, Electric Scooters in Flipkart