மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா: இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால்... பட்லர் கூறும் புதிய தகவல்
மன்னர் சார்லஸ் முடிசூட்டப்படும் நாள் நெருங்கிவரும் நிலையில், இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும்?
டயானாவின் பட்லர் வெளியிட்டுள்ள இரகசிய கடிதம்
இளவரசி டயானா 1993க்கும் 1997க்கும் இடையில் எழுதிய ஒரு கடிதத்தை அவரது பட்லரான பால் பர்ரல் வெளியிட்டுள்ளார்.
SOURCE: MEGA
அந்த கடிதத்தில், மன்னராட்சி தொடரவேண்டும் என டயானா குறிப்பிடுள்ளார். அதாவது, மன்னராட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் டயானா.
SOURCE: MEGA
இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால்...
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின்போது இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பது குறித்தும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் பால் பர்ரல்.
தனது 60 வயதுகளிலிருக்கும் டயானா, அழகாக, எல்லாரையும் விட அதிகமாக மக்களைக் கவரும் வகையில், மன்னருடைய முடிசூட்டுவிழாவில் அமர்ந்திருப்பார் என்கிறார் பால்.
SOURCE: MEGA
நிச்சயமாக, அவர் சார்லஸ் மீதும் கமீலா மீதும் எவ்வித வெறுப்பையும் காட்டியிருக்கமாட்டார் என்றும் கூறுகிறார் பால்.
SOURCE: MEGA