இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம்: மன்னர் சார்லசுக்கு விடுத்துள்ள கோரிக்கை

United States of America United Kingdom King Charles III
By Balamanuvelan Apr 07, 2026 11:52 AM GMT
Report

இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம், மன்னர் சார்லஸ் தங்களைசந்திக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னர் சார்லசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஏராளம் இளம்பெண்கள், சிறுமிகளை வேலை தருவதாக ஏமாற்றி, சீரழித்து, தன் நண்பர்களுக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.

எப்ஸ்டீனுடைய நண்பர்களில் ஒருவர் பிரித்தானிய மன்னரான சார்லசுடைய தம்பி இளவரசர் ஆண்ட்ரூ. 

இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம்: மன்னர் சார்லசுக்கு விடுத்துள்ள கோரிக்கை | King Charles Denies To Meet Victim Family In Us

இளவரசர் ஆண்ட்ரூவும் பெண்கள் வாழ்வில் விளையாடியதாக செய்திகள் வெளியாக, அவர் அதை மறுக்க, விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் இளம்பெண் வெளிப்படையாகவே ஆண்ட்ரூ மீது குற்றம் சாட்டினார். 

பருவம் எய்தாத வயதிலேயே தன்னுடன் ஆண்ட்ரூ உடல் ரீதியான உறவு கொண்டதாக விர்ஜினியா குற்றம் சாட்ட, ராஜ குடும்பம் தலைகுனிந்தது.

அதைத் தொடர்ந்து, எப்ஸ்டீன் குறித்த பல செய்திகள் வரிசையாக வெளியாகத் துவங்கின. 

70 சிறுவர்களை தடுப்புக் காவலில் அடைத்த பிரித்தானியா

70 சிறுவர்களை தடுப்புக் காவலில் அடைத்த பிரித்தானியா

சமீபத்தில், அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிடத் துவங்கியது. அவற்றில் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த புகைப்படங்கள் உட்பட ஏராளமான ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது.

அவற்றில் பலவற்றில் ஆண்ட்ரூ, இளம்பெண்களுடன் நெருக்கமாக இருந்ததும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டார். தன் தம்பியை கைது செய்ய அனுமதிக்கும் அளவுக்கு எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றதாக மன்னர் சார்லசுக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

இந்நிலையில், பிரித்தானிய மன்னரான சார்லஸ் இந்த மாத இறுதியில் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்ல இருக்கிறார். 

இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம்: மன்னர் சார்லசுக்கு விடுத்துள்ள கோரிக்கை | King Charles Denies To Meet Victim Family In Us

அவர் அமெரிக்கா வர இருக்கிறார் என்று தெரிந்ததுமே, அவர் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம்: மன்னர் சார்லசுக்கு விடுத்துள்ள கோரிக்கை | King Charles Denies To Meet Victim Family In Us

அத்துடன், ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்டு, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட விர்ஜினியாவின் குடும்பத்தினர், மன்னர் தங்களை சந்திக்கவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.

அரண்மனை பதில்

ஆனால், மன்னர் சார்லஸ் அமெரிக்கா செல்லும்போது, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களையோ, விர்ஜினியாவின் குடும்பத்தினரையோ சந்திக்கமாட்டார் என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது. 

இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம்: மன்னர் சார்லசுக்கு விடுத்துள்ள கோரிக்கை | King Charles Denies To Meet Victim Family In Us

எப்ஸ்டீன் தொடர்பில் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைகள் தொடர்வதால், அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே மன்னர் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கமாட்டார் என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US