இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களை ஒதுக்கிவைக்க மன்னர் சார்லஸ் முடிவு

Royal Family King Charles III Epstein Files
By Balamanuvelan Mar 21, 2026 01:10 PM GMT
Report

சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களை ஒதுக்கிவைக்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய இளவரசரும் மனைவியும்

இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும், ஏராளம் இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்ததால், ராஜ குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்கள். 

இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களை ஒதுக்கிவைக்க மன்னர் சார்லஸ் முடிவு | King Charles To Avoid Beatrice And Eugenie

என்றாலும், ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்ததால், மன்னர் சார்லஸ் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டுவந்தார்.

ஆகவே, அவர்கள் வழக்கம்போலவே ராஜ குடும்பத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்தார்கள்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வீசிய துர்நாற்றம்: 13 மணி நேரம் சமையலறையில் சடலம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வீசிய துர்நாற்றம்: 13 மணி நேரம் சமையலறையில் சடலம்

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதுகூட அனைவரும் இணைந்து தேவாலய ஆராதனையில் கலந்துகொண்டார்கள்.

ஆனால், இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும், ஒரு சிறுமியை சீரழித்த குற்றத்துக்காக சிறை சென்று திரும்பி, காலில் மின்னணுப்பட்டையுடன் இருக்கும் மோசமான குற்றவாளியான எப்ஸ்டீனை, அவர் வீட்டுக்கு, தங்கள் தாயுடன் சென்று சந்தித்த விடயம், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள் மூலம் சமீபத்தில் தெரியவந்தது.

அந்த தகவல் வெளியானதும், அதுவரை இளவரசிகள் மீது பரிதாபம் கொண்டிருந்த பிரித்தானிய மக்கள் கோபமடைந்தார்கள்.

அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும்கூட ராஜ குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைக்கவேண்டும் என குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

ஆண்ட்ரூ, சாரா மற்றும் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீதான கோபம், மன்னராட்சிக்கே எதிராக திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது ஆண்ட்ரூ, சாராவைப்போலவே, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியையும் ராஜகுடும்பத்திலிருந்து ஒதுக்கிவைக்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். 

இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களை ஒதுக்கிவைக்க மன்னர் சார்லஸ் முடிவு | King Charles To Avoid Beatrice And Eugenie

ஆகவே, வரும் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ராஜ குடும்பத்துடன் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், பக்கிங்காம் அரண்மனையில் அவ்வப்போது garden party என்னும் பார்ட்டிகள் நடத்தப்படும். கடந்த முறை இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் நடத்திய பார்ட்டியில் இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் பங்கேற்றார்கள்.

ஆனால், மன்னரே அவர்களை ஒதுக்கிவைக்க முடிவு செய்துள்ளதால், இனி நடத்தப்படும் garden party என்னும் பார்ட்டிகளில் கலந்துகொள்ள இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு இளவரசர் வில்லியமும் கேட்டும் அழைப்பு விடுக்க வாய்ப்பில்லை என ராஜ குடும்ப எழுத்தாளரான ரஸ்ஸல் மையர்ஸ் என்பவரும் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US