மைசூரு மன்னருக்கு சொந்தமாக வீடு இல்லையா! அப்டினா அரண்மனை யாருக்கு சொந்தம்?
பாஜக சார்பில் போட்டியிடும் மைசூரு மகாராஜா சொந்தமாக வீடு என்று கூறிய நிலையில், அரண்மனை யாருக்கு சொந்தம் என்று காங்கிரஸ் வேட்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மைசூரு மகாராஜா
வரும் மக்களவைத் தேர்தலில் மைசூரு குடகு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் (32) போட்டியிடுகிறார்.
இவர் வேட்புமனு தாக்கல் செய்த போது தனது பிராமண பத்திரத்தில், தனக்கு ரூ.4 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 303 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், மனைவி திரிஷிகா குமாரியிடம் ரூ.1.4 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், மகன் ஆத்வீரிடம் ரூ.3.63 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னிடம் 3.4 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி இருப்பதாகவும், மனைவியிடம் ரூ. 1.02 கோடி மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதோடு, தனது பெயரில் 1.36 கோடி மதிப்பிலான முதலீட்டு பத்திரங்கள், வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் பணம் உள்ளது என்று கூறியுள்ளார். குறிப்பாக அவர் தனக்கு சொந்தமாக கார், வீடு மற்றும் நிலம் இல்லை என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் கேள்வி
இதுதொடர்பாக அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணா கூறுகையில், "தேர்தல் வருவதற்கு முன்பாகவே மைசூரு மகாராஜா பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார். அவரிடம் சொந்தமாக கார், வீடு இல்லை என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?
மைசூரு,பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட ஊர்களில் அரண்மனைகளில் தான் வசிக்கிறார். அப்படியானால் அந்த அரண்மனை யாருக்கு சொந்தம்.
எத்தனை வெளிநாட்டு கார்களை பயன்படுத்துகிறார் என அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் பொய்யான தகவல்களை பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |