ஆண்ட்ரூவின் பிள்ளைகள் இலவச மாளிகைகளில் வசிப்பதாக வெளியான தகவல்: மன்னரின் நடவடிக்கை
சர்ச்சையில் சிக்கி பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூவின் பிள்ளைகள், வாடகை செலுத்தாமல் இலவசமாக மாளிகைகளில் வசிப்பதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
இலவச மாளிகைகளில் வசிக்கும் இளவரசிகள்
இளவரசர் ஆண்ட்ரூவின் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும், தாங்கள் வாழும் மாளிகைகளுக்கு ஒரு பைசா கூட வாடகை செலுத்துவதில்லை என்றும், அவர்களுக்கு தனியாக வீடுகள் இருக்கும் நிலையிலும், மக்கள் வரிப்பணத்தில் இலவசமாக மாளிகைகளில் குடியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியாருடன் சார்லஸ் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் வாழும் வீடுகளுக்கான வாடகையை மன்னர் சார்லஸ் செலுத்துவதாக கூறப்படுகிறது.
ஆனால், ராஜ குடும்பத்தில் பணி எதுவும் செய்யாமலிருந்தும், அவர்களுக்கென தனி வீடுகள் இருந்தும், இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் வாடகை செலுத்தாமல் மக்கள் பணத்தில் மாளிகைகளில் வசிப்பதாக கூறப்படுவதால் மக்கள் கோபமடைந்துள்ளார்கள்.
மன்னரின் நடவடிக்கை
இந்நிலையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் வீட்டு வாடகை ஒப்பந்தம் தொடர்பில் மன்னர் சார்லஸ் மீளாய்வு செய்ய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவை இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாட்சியமளிப்பதற்காக ராஜ குடும்பத்திலிருந்து சிலரை அழைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |