உன்னை திருமணம் செய்ய முடியாது! சார்லஸின் திருமண முன்மொழிவுகளை 2 முறை நிராகரித்த அழகிய பெண்
சார்லஸை அவரின் காதலி அன்னா வாலஸ் ஒரு சமயம் நீ எனக்கு வேண்டாம் என தூக்கி எறிந்ததும் அதற்கு பின்னால் காரணமாக கமிலா இருந்ததும் தெரியவந்துள்ளது.
சார்லஸ் -அன்னி
சார்லஸுக்கும், கமிலாவுக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. சார்லஸின் முதல் மனைவி இளவரசி டயானா என்பது அனைவரும் அறிந்ததே..! டயானாவை மணப்பதற்கு முன்னர் சார்லஸ் சில பெண்களுடன் காதலில் இருந்தார்.
அதன்படி டயானாவை சந்திப்பதற்கு முன்னர் அன்னி வாலஸ் என்ற அழகிய பெண்ணுடன் சார்லஸ் காதலில் இருந்தார். ஸ்காட்லாந்தை சேர்ந்த அன்னியுடன் தொடர்பில் இருந்த போது இரு முறை சார்லஸ் அவரை மணக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.
ஆனால் நீ எனக்கு கணவராக வேண்டாம் எனவும் உன்னை திருமணம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கும் வகையில் அவரின் திருமண முன்மொழிவுகளை இரண்டு முறை அன்னி நிராகரித்ததாக கூறப்படுகிறது.
GETTY
கமிலாவுடன் நடனத்தால் கடுப்பான அன்னி
இந்த தகவலை Express UK வெளியிட்டுள்ளதோடு, அரச எழுத்தாளர் பென்னி சூனரும் இது தொடர்பில் எழுதியுள்ளார். அன்னியின் முடிவுக்கு காரணமாக இருந்தது கமிலா தான் கூறப்படுகிறது, ஏனெனில் சில நிகழ்ச்சிகளில் கமிலாவுடன் சார்லஸ் நடனமாடியதை பார்த்த பின்னரே அன்னி அவரை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.
அதாவது அன்னியை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று சில முறை கமிலாவுடன் தொடர்ந்து நெருக்கமாக சார்லஸ் நடனமாடியிருக்கிறார். அப்போது அன்னி சார்லஸிடம், என்னை யாரும் இப்படி நடத்தியதில்லை என்ற வார்த்தையை கூறி சார்லஸை பிரிந்தார் எனவும் பென்னி தெரிவித்திருக்கிறார்.
GETTY