திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த மருத்துவர்! நடந்தது என்ன?
மாணவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று மயங்கி விழுந்து பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மருத்துவர்
இந்தியாவில் கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியையாகவும், மருத்துவ கண்காணிப்பாளராகவும், பணியாற்றி வந்த 57 வயதுடைய புவனேஸ்வரி என்ற பெண் மருத்துவருக்கே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவர் பணியாற்றும் மருத்துவமனை அருகிலே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு M.B.B.S முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்துள்ளது.
அந்த நேரத்தில் மாணவர்களும் உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை அங்கிருந்த வைத்தியர்கள் பரிசோதித்துள்ளனர்.
பரிசோதித்த வைத்தியர்கள் கூறிய காரணம்
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக நரம்பு மண்டலம் வெடித்து, உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்கள். மேலும் அந்த மருத்துவ ஆசிரியரின் விருப்பப்படி உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, அஞ்சலிக்காக மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டு, பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |