பத்திரனாவை விடுவித்த சென்னை அணி! மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் மினி ஏலத்தில் மதீஷா பத்திரனாவை ரூ.18 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.
கேமரூன் கிரீன்
ஐபிஎல் 2026 மினி ஏலம் அபுதாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
இதில் பல வீரர் எடுக்கப்படாத நிலையில், அவுஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் (Cameron Green) ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பத்திரனா
அதைவிட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவை (Matheesha Pathirana) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
மேலும், கொல்கத்தா அணி அவரை ரூ.18 கோடிக்கு வாங்கியது மற்றொரு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.
Move over, Harvey Specter. There's a new closer in town 😎🔥 pic.twitter.com/CDOLSUnAu0
— KolkataKnightRiders (@KKRiders) December 16, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |