சொந்த மண்ணில் 8 ஆண்டுகளுக்கு பின் சதமடித்த கே.எல்.ராகுல்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.
சுப்மன் கில் 50 ஓட்டங்கள்
அகமதாபாத்தில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் 7 ஓட்டங்களில் சேஸ் பந்துவீச்சில் lbw ஆனார். அணித்தலைவர் சுப்மன் கில் 50 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
கே.எல்.ராகுல் 100 ஓட்டங்கள்
மறுமுனையில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி சதம் விளாசினார். அவர் சொந்த மண்ணில் 8 ஆண்டுகள் 289 நாட்களுக்கு பிறகு இந்த சதத்தை பதிவு செய்துள்ளார்.
உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 100 ஓட்டங்களுடனும், துருவ் ஜூரேல் 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |