நடப்பு ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் விலகல்? வெளியான தகவல்
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் விலக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவை வீழ்த்திய பெங்களூரு
தற்போது ஐபிஎல் தொடர் பல நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது.
இப்போட்டி நடைபெற்ற மைதானத்தில் விராட்கோலிக்கும், கவுதம் கம்பீருக்கு பயங்கரவாத சண்டை வெடித்தது. இந்த சண்டையால் இருவருக்கும் கிரிக்கெட் விதியை மீறியதால் 100 சதவீதம் அபராதம் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல் விலகல்?
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் லக்னோ கேப்டன் கேல்.எல். ராகுலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி எல்.கே.ராகுலின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
BCCI Management will taken care of KL Rahul's injury. pic.twitter.com/rYAXskZFq4
— CricketGully (@thecricketgully) May 3, 2023