பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கத்தி குத்து சம்பவம்: 25 வயது இளைஞர் கைது
மத்திய லண்டனில் நடத்தப்பட்ட கத்தி குத்து சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது.
புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உதவுவதற்காக சாட்சிகளிடம் தொடர்ந்து முறையீடு.
பிரித்தானியாவில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்தின் போது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய லண்டனின் பிஷப்ஸ்கேட்டில் (Bishopsgate) கடந்த வியாழக்கிழமை காலை 9:45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தி குத்து தாக்குதல் அரங்கேறியது.
இந்த தாக்குதலில் மூன்று கத்தி குத்துகள் நடந்ததாகவும், ஒருவர் தரையில் தள்ளப்பட்டதாகவும் லண்டன் நகர காவல் துறைக்கு வியாழன் கிழமை காலை புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு பாதிக்கப்பட்டு இருந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் அருகே தாக்குதலுக்குப் பிறகு ஏராளமான இரத்தம் தரையில் படிந்து இருப்பதையும், மக்கள் தரையில் கிடப்பதைக் கண்டதாக சாட்சிகள் விவரித்தனர்.
இதனை தொடர்ந்து பிரித்தானியாவின் பெரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொள்ளை முயற்சி மற்றும் கத்தி குத்து சம்பவம் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொள்ளைச் சதித்திட்டம், உள்நோக்கத்துடன் கடுமையான உடல் காயம் ஏற்படுத்துதல் மற்றும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உதவுவதற்காக சாட்சிகளிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: வாக்குறுதியை தவறவிட்டதால் சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட இளவரசர் ஹரி: ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்த புதிய தகவல்!
அத்துடன் சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், முக்கிய நிகழ்வு பொது போர்ட்டலைப் பயன்படுத்த வேண்டும் அல்லது 0800 555 111 என்ற எண்ணில் Crimestoppers ஐத் தொடர்புகொள்ளவும்.