ஐரோப்பாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தலம் ஒன்றில் பகீர் சம்பலம்... தெறித்து ஓடிய மக்கள்
ஆம்ஸ்டர்டாமில் உள்ள புகழ்பெற்ற டாம் சதுக்கத்தில் நடந்த ஒரு பகீர் சம்பவத்தில் பலர் காயங்களுடன் தப்பியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் ஓடத் தொடங்கினர்
டசின் கணக்கான அதிகாரிகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் ஒரு விமான ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், குறைந்தது ஐந்து பேர் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், திடீரென்று பெரும் கூச்சல் சத்தங்கள் கேட்டதாகவும், மக்கள் சம்பவம் நடந்த திசையில் ஓடத் தொடங்கினர் என்றும் கூறினார். கத்தியால் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கான நோக்கங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பான காணொளிப் பதிவுகள் பொதுமக்கள் வசமிருந்தால், பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் கத்தியால் திடீரென்று தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஆம்ஸ்டர்டாம் சம்பவம் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரியாவில் தாக்குதல் நடத்திய 23 வயது சிரிய இளைஞர் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் தூண்டப்பட்டு, கொடுஞ்செயலுக்கு முனைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 39 பேர்களில்
காயங்களுடன் தப்பிய ஐவரும் 15 முதல் 36 வயதுடையவர்கள். ஒருவர் துருக்கி நாட்டவர் என்றும் எஞ்சிய அனைவரும் ஆஸ்திர்ய நாட்டவர்கள் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
மட்டுமின்றி, கைது செய்யப்பட்ட நபரின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஐ.எஸ் கொடி ஒன்றையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதேப்போன்று, மியூனிக்கில், இஸ்லாமிய பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தனது மினி கூப்பரை கூட்டத்தின் மீது மோதியதில், ஒரு தாயும் அவரது குழந்தையும் பலத்த காயங்களால் பரிதாபமாக இறந்தனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் அந்த தாக்குதலில் காயமடைந்த 39 பேர்களில் 37 வயது பெண்மணியும் அவரது இரண்டு வயது மகளும் அடங்குவர். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
குறித்த மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் உரையாற்ற வருகை தந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |