Virat Kohli பிறந்தநாள் கொண்டாட்டம்: பட்டாசு வெடித்த அதிர்ச்சியில் குதிரைக்கு நேர்ந்த சோகம்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பட்டாசு வெடித்த அதிர்ச்சியில் காவலரின் குதிரை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 05) இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
அப்போது, கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பாட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அந்த நேரத்தில், வெடிச்சத்தம் கேட்டதும் கொல்கத்தா காவல்துறையைச் சேர்ந்த குதிரை ஒன்று பயங்கரமாக மிரண்டது.
மன்னிக்கவும், இது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆட்டம்! மேக்ஸ்வெலின் இரட்டைசதம் குறித்து மிரண்ட தமிழக வீரர்
மரணம்
இந்த குதிரையானது பந்தய குதிரையாகும். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் கொல்கத்தா காவல்துறையில் சேர்க்கப்பட்டது.
பட்டாசு வெடித்த அதிர்ச்சியில் பிளாசி சாலையில் ஓடிய குதிரை, இரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதியது என தெரிகிறது.
பின்பு, சாலையில் குதிரை சரிந்தது. இருப்பினும், மாரடைப்பு ஏற்பட்டு குதிரை இறந்துள்ளது என தெரியவந்தது. பட்டாசுகளை வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கொல்கத்தா காவல்துறையிடம் முன் அனுமதி பெற்று விட்டோம் என வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளர் நரேஷ் ஓஜா கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |