விராட் கோஹ்லி, ரோஹித் சர்மாவுக்கு புதிய நெருக்கடி... ரூ 200 கோடி வரையில் இழப்பு
இந்திய அரசாங்கம் சமீபத்தில் ஒன்லைன் கேமிங் மசோதா மூலம் பண செலுத்தும் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது, கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான பொருளாதார முடிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர்கள்
இது கிரிக்கெட் உலகத்தின் அனைத்து மூலைகளையும் பாதிக்கும் ஒரு கொள்கையாகும், விளையாட்டின் மிகப்பெரிய பெயர்கள் முதல் இந்த கேமிங் நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட உலகளவில் பரவியுள்ள வளர்ந்து வரும் கிரிக்கெட் லீக்குகள் வரை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தடையை எதிர்கொள்ளும் இந்த நிறுவனங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகி வெளிநாடுகளில் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்திய வீரர்கள் சிலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் ரூ 150 முதல் 200 கோடி வரையில் இழக்க நேரிடும் என்றே கூறப்படுகிறது. MPL உடனான ஒப்பந்தத்தின் மூலம் விராட் கோஹ்லி ஆண்டுதோறும் 10 முதல் 12 கோடி சம்பாதித்து வருகிறார்.
அதே போல் டிரீம் 11 மற்றும் வின்சோவிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ். டோனி ஆகியோரும் முறையே 6-7 கோடி வரையில் சம்பாதிக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி, இளம் கிரிக்கெட் வீரர்களும் ஆண்டுக்கு ரூ 1 கோடி வரையில், இந்த நிறுவன விளம்பரங்களில் இருந்து சம்பாதிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |