அம்பானி குடும்பத்தின் தூண் கோகிலாபென்; எந்த மகனுடன் வசிக்கிறார் தெரியுமா?
அம்பானி குடும்பம் எப்போதுமே தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் போனவர்களாவர். இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில் முகேஷ் அம்பானியும் ஒருவர். முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி கடனில் மூழ்கியுள்ளார்.
தாய் கோகிலாபென் சகோதரர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைத்துள்ளார்.

அம்பானி குடும்பத்தின் ஒவ்வொரு முடிவுகளிலும் அம்மா கோகிலாபெனின் கருத்து மிகவும் முக்கியமானது.
அந்தவகையில் அம்பானி குடும்பத்தில் அதிக சொத்து வைத்திருக்கும் கோகிலாபென் எந்த மகனுடன் வசிக்கிறார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கோகிலாபென் அம்பானி யாருடன் வசிக்கிறார்?
ஊடக அறிக்கைகளின்படி, கோகிலாபென் தனது மூத்த மகன் முகேஷ் அம்பானியுடன் அவரது குடும்பத்தின் ஆண்டிலியாவில் வசித்து வருகிறார்.

கோகிலாபென் தனது மருமகள்களான நீதா அம்பானி மற்றும் டினா அம்பானி இருவரையும் நேசிக்கிறார்.
டினா அம்பானி அடிக்கடி கோகிலாபென் மீதான தனது அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துகிறார், அதே நேரத்தில் நீதா அம்பானி ஒவ்வொரு விழாவிலும் தனது மாமியாரின் கையைப் பிடித்தபடி நடந்து செல்வார்.
கோகிலாபென் தனது மருமகள்கள் இருவருடனும் தாய்-மகள் போன்ற உறவைக் கொண்டுள்ளார்.

கோகிலாபென் அளித்த பேட்டியில், தனது மருமகள்கள் இருவரும் மிகவும் அக்கறையுள்ளவர்கள் என்று கூறியுள்ளார். அனிலை தினமும் சந்திக்கிறேன். வாரத்திற்கு மூன்று முறை அங்கு செல்வேன். என் குழந்தைகள் என்னை மிகவும் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்.
கோகிலாபென் அம்பானியின் சொத்து மதிப்பு தொடர்பில் வெளிப்படையான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், அவருக்கு ரூ 18,000 கோடிக்கு சொத்து இருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |