இலங்கையில்தான் எனது அறிமுகம்; இன்று ஆட்டநாயகி - பெருமிதத்துடன் கூறிய இந்திய வீராங்கனை
பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய கிராந்தி கவுட், தான் ஆட்டநாயகி விருது பெற்றது குறித்து பெருமையுடன் பேசினார்.
கிராந்தி கவுட்
மகளிர் உலகக்கிண்ணத்தின் நேற்றையப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 248 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 159 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது.
இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கிராந்தி கவுட் (Kranti Gaud), 10 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 3 மெய்டன்கள் அடங்கும்.
இதன்மூலம் ஆட்டநாயகி விருது பெற்ற கிராந்தி கவுட் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "இந்திய அணிக்கான எனது அறிமுகமும் இலங்கையில்தான் நடந்தது, இன்று நான் இங்கு ஆட்ட நாயகி. இது எனக்கும், என் குடும்பத்திற்கும் பெருமையான தருணம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.
கடந்த மே மாதம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கிராந்தி கவுட் அறிமுகமானார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |