மக்கள் இறப்பதை நிறுத்துவதைக் காண விரும்பும் ட்ரம்ப்: ஜனாதிபதி புடினுடன் உரையாடல் நிகழ்ந்ததா?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே தொலைபேசி உரையாடல் நிகழ்ந்ததாக வெளியான செய்தி குறித்து கிரெம்ளின் கருத்து தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வர
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முன்பே, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என உறுதி அளித்தார்.
ஆனால் அவர் பதவியேற்றதைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் எந்தவொரு தொடர்பையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில்தான் அமெரிக்க செய்தி ஊடகமான நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், உக்ரைனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க புடினுடன் தொலைபேசியில் ட்ரம்ப் பேசியதாகவும், மக்கள் இறப்பதை நிறுத்துவதைக் காண அவர் விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தது.
உரையாடல் குறித்து செய்தித் தொடர்பாளர்
மேலும், தலைவர்கள் எத்தனை முறை பேசினார்கள் என்பதை கூறாமல் இருப்பது நல்லது என்று ட்ரம்ப் கூறியதாக மேற்கோள் இட்டுக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து இதுகுறித்து பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உரையாடல் நடந்ததை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது. ஆனால் அத்தகைய அழைப்பு எதுவும் தனக்குத் தெரியாது என்று கூறினார்.
அத்துடன் அவர், "இந்த செய்தியைப் பற்றி நான் என்ன கூற முடியும்? வாஷிங்டனில் நிர்வாகம் அதன் பணிகளை விரிவுபடுத்தும்போது, பலவிதமான தகவல் தொடர்புகள் எழுகின்றன. மேலும் இந்தத் தகவல் தொடர்புகள் பல்வேறு வழிகள் மூலம் நடத்தப்படுகின்றன" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |