உலகமே எதிர்பார்க்கும் புடின், ட்ரம்ப் சந்திப்பு எங்கு நடைபெறவுள்ளது? உறுதிப்படுத்திய ரஷ்யா
டொனால்டு ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் சந்திப்பு அலாஸ்காவில் நடைபெற உள்ளதாக ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தில்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பல விடயங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஈடுபட உள்ளனர்.
சர்வதேச நாடுகள் எதிர்பார்க்கும் இந்த முக்கிய சந்திப்பானது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெற உள்ளது.
ஆகத்து 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அங்கு புடினை சந்திக்க உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
தர்க்கரீதியானது
ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ரஷ்யாவும், அமெரிக்காவும் நெருங்கிய அண்டை நாடுகள், ஒருவருக்கொருவர் எல்லையாக உள்ளன.
எங்கள் பிரதிநிதிகள் குழு பெரிங் ஜலசந்தியைக் கடந்து பறக்க வேண்டும் என்பதும், இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான ஒரு முக்கியமான மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாடு அலாஸ்காவில் நடத்தப்படுவதும் மிகவும் தர்க்கரீதியானதாகத் தெரிகிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |