புடினால் லண்டன் அல்லது பாரீஸையும் தாக்கமுடியும்... ரஷ்ய தரப்பு கொடுத்துள்ள அதிர்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இதுவரை இல்லாத வகையில் புடினுக்கு சலுகைகளை வழங்கிவருவதால், பிரஸ்ஸல்ஸ், லண்டன் அல்லது பாரீஸையும் ரஷ்யா தாக்கக்கூடும் என்று கூறியுள்ளார் கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.
லண்டன் அல்லது பாரீஸை தாக்கவும் புடினுக்கு அனுமதி
அதாவது, புடினுக்கு ட்ரம்ப் சலுகைகள் கொடுத்துவரும் விடயம், அவர் பிரஸ்ஸல்ஸ், லண்டன் அல்லது பாரீஸ் என எந்த இடத்தை வேண்டுமானால் தாக்கலாம், அதற்கு அவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது போலாகிவிடும் என கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
ட்ரம்பும் புடினும் உக்ரைன் போர் தொடர்பில் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளைப் பார்க்கும்போது, ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளை உக்ரைன் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலரான Pete Hegseth, ஐரோப்பிய ராணுவம் ரஷ்யாவுக்கெதிராக களமிறங்குமானால், நேட்டோ ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவை அமெரிக்கா புறக்கணிக்கும் என்று கூறியுள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின் மீது நடத்தப்படும் தாக்குதல் அனைத்து நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சமம் என்கிறது நேட்டோ ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவு.
ஆக, அப்படி நேட்டோ ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவு புறக்கணிக்கப்படுமானால், நாங்கள் நினைத்தால் பிரஸ்ஸல்ஸ், லண்டன் அல்லது பாரீஸ் என எந்த இடத்தை வேண்டுமானால் தாக்க முடியும் என்பதை ஐரோப்பியர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் ரஷ்ய அரசியல் வல்லுநரான Sergey Mikheyev என்பவர்.
நாங்கள் அப்படி பிரஸ்ஸல்ஸ், லண்டன் அல்லது பாரீஸ் என எந்த இடத்தை தாக்கினாலும், உங்களை பாதுகாக்க அமெரிக்கா வரும் என்னும் எண்ணத்தை விட்டுவிடுங்கள் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |