விளாடிமிர் புடினுக்கு எதிராக காய் நகர்த்தும் அவருக்கு மிக நெருக்கமான இரு தலைவர்கள்
போர் தோல்விக்கு முதன்மை காரணம் ரஷ்யாவின் செயற்பாடு என பழி கூறும் பொருட்டு வாக்னர் கூலிப்படை தலைவரும் செச்சினியா தலைவரும் கூட்டாக முயற்சி மேற்கொள்வதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
களநிலவரம் சாதகமல்ல
உக்ரைனின் பக்மூத் பகுதியை கைப்பற்றும் பொருட்டு வாக்னர் கூலிப்படை ஆதரவுடன் கடந்த சில வாரங்களாக ரஷ்யா தீவிரமாக போரிட்டு வந்தது. இந்த நிலையில், களநிலவரம் தங்களுக்கு சாதகமல்ல என்பதை புரிந்து கொண்ட வாக்னர் கூலிப்படை பாக்மூத் பகுதியில் இருந்து விலக இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.
@getty
ஆனால், ரஷ்யா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பில் எந்த பதிலும் அளிக்கப்பவில்லை. இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், பக்மூத் பகுதியில் ஏற்பட்ட தோல்விக்காக வாகனர் தலைவர் மற்றும் செச்சினியா தலைவரும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை கண்டிப்பாக விமர்சிப்பார்கள் எனவும் அவர்களின் வீரர்களை ரஷ்யா பயனற்றவை என்று சித்தரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய அரசாங்கத்தின் தோல்வி தான் பக்மூத் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவு என சாதிக்க தேவையான தரவுகளை இந்த இரு தலைவர்களும் திரட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.
@getty
ஒத்துழைப்பு அளிக்க தயார்
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதியின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும், தங்கள் படை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் திட்டமிடலுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக இருப்பதாகவும் செச்சினியா தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், உக்ரைனின் பக்மூத் பகுதியில் ரஷ்ய படைகளின் தோல்விக்கு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தையும் வாக்னர் கூலிப்படை தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
@getty
தங்களுக்கு போதுமான ஆயுத உதவிகளை ரஷ்யா அளிக்கவில்லை என்பதும் பின்னடைவு ஏற்பட்டதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.