உலக அமைதிக்காக அணுஆயுதங்களை கைவிட்டோம்... ஆனால் எங்களுக்கான கதவுகள் திறக்கப்படவில்லை: குலேபா கருத்து!
உலக அமைதிக்காக அணுஆயுதங்களை கைவிட்டோம், ஆனால் விளைவு உக்ரைனுக்கு பாதிப்பை தந்துள்ளது என அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைப்பெற்று வரும் போரில், ரஷ்ய ராணுவத்தின் தொடர் ஏவுகணை தாக்குதலால் பெரும்பாலான உக்ரைன் நகரங்கள் சிதைந்து அழிந்துள்ளன, கிட்டதட்ட 5.4 மில்லியன் மக்கள் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து உக்ரைன் நகரை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றன.
இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், உக்ரைனுக்கு அதன் நட்பு நாடுகள் எத்தகைய பாதுகாப்பு உத்திரவாதங்களை வழங்கயுள்ளனர் என்பதை தெளிவுபடுத்த வலியுறுத்தினார்.
Ukraine gave up nuclear weapons for the sake of world peace. We have then been knocking on NATO’s door, but it never opened. Security vacuum led to Russian aggression. The world owes Ukraine security and we ask states to decide which security guarantees they are ready to provide.
— Dmytro Kuleba (@DmytroKuleba) April 29, 2022
மேலும் உலகின் அமைதிக்காக உக்ரைன் தங்களது அணுஆயுதங்களை கைவிட்டதால், அதற்கான பாதிப்பு விளைவுகளை தற்போது பெற்றுவருவதாக டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மனிதாபிமான உதவிகளை செய்ய சென்ற...பிரித்தானியர்களை சிறைப்பிடித்த ரஷ்ய ராணுவம்
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உக்ரைன் நோட்டோவின் கதவை தட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும், ஆனால் கதவுகள் திறக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.