ரஷ்யாவில் எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் குர்ஸ்க் பிராந்திய துணை ஆளுநர் கைது
ரஷ்யாவின் தென்மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தின் துணை ஆளுநர் விளாடிமிர் பசரோவ் கைது செய்யப்பட்டார்.
விளாடிமிர் பசரோவ்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குர்ஸ்க் பிராந்தியத்தில் தற்காலிக துணை ஆளுநராக விளாடிமிர் பசரோவ் (Vladimir Bazarov) நியமிக்கப்பட்டார்.
இவர் இதற்கு முன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் செவாஸ்டோபோல் அரசாங்கத்தின் துணை ஆளுநராகவும், தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார்.
இந்த நிலையில் சட்ட அமலாக்க அதிகாரிகள் விளாடிமிர் பசரோவை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மோசடி
ரஷ்யாவின் அண்டை பிராந்தியமான பெல்கோரோட் எல்லைப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, அவர் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேபோல் ஆளுநர் அலெக்ஸாண்டர் கின்ஷ்டீனும் இந்த கைதினை ஒரு டெலிகிராம் பதிவில், "இந்த வழக்கு தற்காப்பு கட்டமைப்புகளை நிர்மாணிப்பது தொடர்பானது என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன" என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய புலனாய்வுக்குழு அவரது கைது குறித்து இன்னும் எந்த கருத்தும் கூறாத நிலையில், விசாரணைக்காக பசரோவ் மாஸ்கோவிற்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |