கேப்டன் சிக்ஸர் அடித்து இலங்கை வெற்றி! குசல் மெண்டிஸ் ருத்ர தாண்டவம்
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டி20யில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
155 ஓட்டங்கள் இலக்கு
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகேலேவில் நடந்தது.
வங்காளதேச அணி முதலில் துடுப்பாடியது. பர்வேஷ் ஹொசைன் இமோன் 22 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் மெஹிதி ஹசன் மிராஸ் 29 (23) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, மொஹம்மது நைம் ஆட்டமிழக்காமல் 32 (29) ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் வங்காளதேசம் 154 ஓட்டங்கள் சேர்த்தது. தீக்ஷணா 2 விக்கெட்டுகளும், துஷாரா, ஷானக மற்றும் வாண்டர்சே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
குசல் மெண்டிஸ் ருத்ர தாண்டவம்
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிசங்க (Pathum Nissanka) 16 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
அடுத்து வந்த குசல் பெரேரா 24 ஓட்டங்களில் வெளியேற, ருத்ர தாண்டவமாடிய குசல் மெண்டிஸ் (Kusal Mendis) 51 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
அணித்தலைவர் சரித் அசலங்கா 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க, இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
VICTORY! 🎉 We've beaten Bangladesh by 7 wickets to take a 1-0 lead in the three-match series!
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 10, 2025
What a start to the series! Onwards and upwards, boys!👊 #SLvBAN #SriLankaCricket pic.twitter.com/jeBfiOaI7g
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |