குவைத்தில் தமிழர்கள் வசித்த கட்டிடத்தில் பாரிய தீ விபத்து., 41 பேர் பலி
குவைத்தின் மங்காப் நகரில் தமிழர்கள், மலையாளிகள் உட்பட பல இந்தியர்கள் வசித்த கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இந்த பாரிய தீ விபத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர், அதில் குறைந்தது 10 பேர் இந்தியர்கள். 5 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.
மேலும், இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அதில் 30 பேர் இந்தியர்கள்.
குவைத் நேரப்படி காலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியது.
ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
மேஜர் ஜெனரல் ஈத் ரஷீத் ஹமாத் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இந்த கட்டிடத்தில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.
இந்திய தூதரகம் வெளியிட்ட Helpline எண்
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது. இந்த எண்- +965-65505246. இந்திய தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளது.
ஒரே அறையில் பலர்...
ஒரே அறையில் பலர் வசிப்பதாகவும், பணத்தை மிச்சப்படுத்தவே இந்தத் தொழிலாளர்கள் இதைச் செய்கிறார்கள். தகவல் தெரிவிக்காமல் யாரும் கட்டிடத்தில் தங்கக்கூடாது என்பதற்காக இது குறித்து அவ்வப்போது எச்சரித்து வருகிறோம் என்று குவைத்தில் உள்ள மூத்த பொலிஸ் கமாண்டர் ஒருவர் கூறியுள்ளார்.
கட்டிட உரிமையாளரை கைது செய்ய குவைத் அரசு உத்தரவு
குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹ்த் அல் யூசுப் அல் சபா கட்டிட உரிமையாளரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் பேராசையால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்றார்.
அதிக வாடகை என்ற பேராசையில் கட்டிட உரிமையாளர்கள் பலரை ஒரே அறையில் தங்க வைக்கின்றனர். இந்த நேரத்தில், கட்டிடத்தின் பாதுகாப்பு அமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Kuwait Times செய்தியின்படி, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் 160க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்த கட்டிடத்தில் பலர் சட்டவிரோதமாக வசித்து வருவதாகவும், இதனால் அவர்கள் எந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அறிய முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்.
அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மலையாளி
மலையாள ஊடகமான Onmanorama வெளியிட்ட செய்தியில், கட்டிடத்தில் வசித்து வந்த இந்தியர்கள் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்தக் கட்டிடம் கட்டுமானத் துறை நிறுவனமான NBTC குழுமத்தைச் சேர்ந்தது. இந்த கட்டிடம் மலையாள தொழிலதிபர் கே.ஜி.ஆபிரகாமுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த தொழிலதிபர் கே.ஜி.ஆபிரகாம். கேஜிஏ குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கேஜி ஆபிரகாம் என்றும் அழைக்கப்படுகிறார். நிறுவனம் 1977 முதல் குவைத்தில் உள்ள முக்கிய எண்ணெய் மற்றும் தொழில்துறையின் ஒரு பகுதியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |