குவைத் மீது ஈராக்கில் இருந்து ட்ரோன் தாக்குதல்
ஈராக்கில் இருந்து குவைத் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குவைத்தில் இருந்து விமான சேவை தொடக்கம்
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரில், மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள குவைத், உள்ளிட்ட நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது.
கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் நடத்திய வான் தாக்குதலில், குவைத் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்திருந்த நிலையில், தற்போது விமான நிலையம் சரிசெய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட 17 முக்கிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
குவைத் மீது ட்ரோன் தாக்குதல்
இந்நிலையில், இன்று குவைத்தில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவைத்தின் வடக்கு எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சேதம் ஏற்பட்டது, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் வழிநடத்தப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் ஈராக்கிலிருந்து ஏவப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஈராக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எந்த குழுவும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
ஈரானுக்கு ஆதரவான குழுக்கள் ஈராக்கில் இருந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |