போரிஸ் ஜான்சன் பெயரில் புதிய உணவை தயாரித்த உக்ரைன்!
உக்ரைனில் உள்ள பேக்கரியில் ஒரு புதிய இனிப்பு உணவுக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள Zavertailo Cafe பேக்கரி, பிரித்தானிய பிரதமரின் நினைவாக அவரது பெயரை அதன் பேஸ்ட்ரிக்கு சூட்டியுள்ளது.
இந்த சுவையான இனிப்பு உணவின் சிறப்பம்சம் என்னவென்றால், இது போரிஸ் ஜான்சனின் சிகையலங்காரத்தை கொண்டுள்ளது என்று அந்த பேக்கரி தெரிவித்துள்ளது.
ஜாவெர்டைலோ கஃபே பேக்கரி மே 6-ஆம் திகதி அதன் இன்ஸ்டாகிராம் பதிவில் "போரிஸ் ஜான்சன் ஒரு பிரதம மந்திரி மட்டுமல்ல, இப்போது ஒரு குரோசண்ட்டாகவும் (Croissant) இருக்கிறார்" என்று அறிவித்தது.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் பிரித்தானிய நண்பர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி செலுத்தும் வகையில், அவர்களுக்கு இந்த இனிப்பு உணவு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது அந்த பேக்கரி தெரிவித்துள்ளது.
இந்த இனிப்பானது, ஆங்கில ஆப்பிள் பை மற்றும் பிரித்தானிய பிரதமரின் அழகான ஹேர்கட் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதாக பேக்கரி கூறியுள்ளது.
இந்த இனிப்பு உணவு, 3 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது மற்றும் பல சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: கோவாவில் மசாஜ் என்ற பெயரில் பிரித்தானிய பெண்ணுக்கு காதலன் கண்முன் நடந்த பயங்கரம்!
PC: Getty Images
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வீரர்களுக்கு ஆயுதங்களை வழங்கி பிரித்தானியா உதவியது. இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய பிறகு அவர்கள் பெற்ற வெற்றியை விவரிக்கும் வீடியோக்களை உக்ரேனிய ஆயுதப் படைகள் தங்கள் சமூக ஊடக சேனல்களில் வெளியிட்டு வருகின்றன.
இதற்கிடையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்களன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியைப் பெற்று, தனது பதவியை தக்கவைத்துக்கொண்டார்.
PC: Getty Images
இதையும் படிங்க: மனித கடத்தல் நெருக்கடியாக உருவெடுக்கும் உக்ரைன்-ரஷ்ய போர்: ஐ.நா எச்சரிக்கை