அமைதிக்காக உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்க நேரிடலாம்! கீவ் மேயர் பரபரப்பு கருத்து
உக்ரைன் அமைதி உடன்படிக்கைக்காக நிலத்தை விட்டுக்கொடுக்க நேரிடுமா என்பதற்கான பதிலை கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க நேரிடலாம்!
ரஷ்யா உக்ரைன் போரின் நெருக்கடிக்கு மத்தியில், அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காக உக்ரைன் தனது சில நிலப்பரப்புகளை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க நேரிடலாம் என்று கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது சர்வதேச அளவில் முக்கிய விவாதத்தை தூண்டியுள்ளது.
பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மேயர் கிளிட்ச்கோ இந்த யோசனையின் தீவிரத்தையும், உக்ரைனுக்கு இது எவ்வளவு கடினமான முடிவாக இருக்கும் என்பதையும் ஒப்புக்கொண்டார்.
மேலும் அமைதி உடன்படுக்கைக்கான ஒரு சூழ்நிலையில் நிலப்பரப்பை விட்டுக்கொடுப்பது அடங்கும். இது நியாயமற்றது. ஆனால் அமைதிக்காக, தற்காலிக அமைதிக்காக, இது ஒரு தீர்வாக இருக்கலாம், தற்காலிகமாக," என்று அவர் கூறினார்.
இருப்பினும், முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரரும், தற்போதைய முக்கிய உக்ரைன் அரசியல் தலைவர்களில் ஒருவருமான கிளிட்ச்கோ, உக்ரைன் மக்களின் மன உறுதியையும், ரஷ்ய ஆக்கிரமிப்பை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் அழுத்தமாக தெரிவித்தார்.
அத்துடன் "உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்," என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
உக்ரைன் மீது தாக்குதல்
கிளிட்ச்கோவின் இந்த கருத்துக்கள், கீவ் நகரின் மீது ரஷ்யா நடத்திய சமீபத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பின்னர் வெளிவந்துள்ளன.
இது சமீபத்திய மாதங்களில் தலைநகரில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.
2022 ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, மாஸ்கோ உக்ரைன் பிரதேசத்தின் சுமார் 20% ஐக் கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |