புடின், ட்ரம்புடன் இணைய தயார்: ஆனால் சுவிட்சர்லாந்து அல்லது இங்குதான் - வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
ஹங்கேரியில் நடைபெற இருக்கும் உச்ச மாநாட்டில் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சமாதான ஒப்பந்தம்
உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு மூன்று ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், போரை முடிவுக்குகொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சமாதான ஒப்பந்தத்தை கொண்டுவர முயற்சித்து வருகிறார்.
இதற்காக சில வாரங்களில் ஹங்கேரிய தலைநகரில் (புடாபெஸ்ட்) சந்திப்போம் என்று ட்ரம்ப் மற்றும் புடின் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), "நான் புடாபெஸ்டிற்கு அழைக்கப்பட்டால் நாங்கள் மூன்று பேர் சந்திக்கும் வடிவத்தில் அழைப்பாக இருந்தால் அது Shuttle Diplomacy ஆக இருக்கும்.
புடினை ஜனாதிபதி ட்ரம்ப் சந்திப்பார், பின் அவர் என்னை சந்திப்பார்; அதனைத் தொடர்ந்து ஏதாவது ஒரு வடிவத்தில் நாங்கள் ஒப்புக்கொள்வோம்" என்று தெரிவித்தார்.
நான் நம்பவில்லை
அதே சமயம் தங்களுடன் பதட்டமான உறவையும், ரஷ்யாவுடன் மிகவும் அனுதாபம் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக கருதப்படும் ஹங்கேரியின் தேர்வை அவர் விமர்சித்தார்.
அப்போது, "உக்ரைனை எல்லா இடங்களிலும் தடுக்கும் ஒரு பிரதமர், உக்ரேனியர்களுக்கு சாதகமான எதையும் செய்ய முடியும் அல்லது சமநிலையான பங்களிப்பை வழங்க முடியும் என்று நான் நம்பவில்லை" என்று கூறினார்.
இதற்கிடையில் சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் வத்திக்கான் உள்ளிட்ட பல நடுநிலை நாடுகளில் ஜெலென்ஸ்கி, புடின் மற்றும் ட்ரம்ப் இடையேயான சந்திப்பில் சேர தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |