உடைந்து நொறுங்கிய கைலியன் எம்பாப்பே: அரவணைத்து ஆறுதல் கூறிய இமானுவல் மேக்ரான்
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் அர்ஜென்டின அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்
குறித்த ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்த பிரான்ஸ் அணி வீரர்கள் மொத்தமாக நொறுங்கிப்போயுள்ளனர். இதில் அர்ஜென்டினா அணியை 3-3 என சம நிலையில் பூட்டிய பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பேயை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஆறுதல்படுத்தும் காட்சிகள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
@getty
கத்தார் உலகக் கோப்பையை இந்த முறை பிரான்ஸ் கைப்பற்றும் என பெரும்பாலானோர் நம்பியிருந்த நிலையில், பெனால்டி ஷூட்அவுட் வேளையில் அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினெஸ் இரண்டு கோல்களை தடுத்து பிரான்ஸ் அணியை மிரள வைத்தார்.
நொறுங்கிப் போன எம்பாப்பே
தோல்வியில் மொத்தமாக நொறுங்கிப் போன எம்பாப்பே மற்றும் பிரான்ஸ் அணியினரை மேக்ரான் ஆறுதல் படுத்தியுள்ளார். பிரான்சின் மிகப்பெரிய கால்பந்து அணியான Paris Saint-Germain-ல் விளையாடிவரும் 23 வயது எம்பாப்பே ஜனாதிபதி மேக்ரானுடன் நட்பு பாராட்டி வருபவர்.
@reuters
ஜனாதிபதி மேக்ரான் ஆரத்தழுவி ஆறுதல் கூறினாலும், எம்பாப்பேயின் மொத்த கவனமும் அர்ஜென்டினா அணியினரின் கொண்டாட்டத்தில் தான் இருந்தது. 2018ல் பிரான்ஸ் அணிக்கு உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வெல்ல காரணமானவர்களில் ஒருவரான எம்பாப்பே, இந்த முறை இறுதிப் போட்டியில் மூன்று கோல்கள் விளாசினார் என்பதுடன், அதிக கோல் விளாசிய வீரருக்கான கோல்டன் பூட் பரிசையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
@getty