பெண்களே! மென்ஸ்சுரல் கப் முதல்முறை பயன்படுத்துறீங்களா? அப்போ கட்டாயம் இதனை தெரிஞ்சிகோங்க
பொதுவாக மென்ஸ்சுரல் கப் என்பது புனல் வடிவில் சிலிகான் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு கப் ஆகும்.
மாதவிடாய் காலத்தின்போது பெண்ணுறுப்பின் உள்ளே இதை பொருத்திக் கொள்வதன் மூலமாக உதிரப் போக்கை சேகரித்து சுத்தம் செய்வதற்கு இது பயன்படுகின்றது.
நம்மில் சில பெண்கள் நேப்கின்களை பயன்படுத்துவது வழக்கம் என்றாலும், சிலருக்கு அது அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதனால் இதற்கு மாறியுள்ளனர்.
இருப்பினும் சிலருக்கு இதனை எப்படி பயன்படுத்து என்பதே தெரியவில்லை.
மென்ஸ்சுரல் கப் பயன்படுத்த முடிவு செய்வதற்கு முன்பாக அதை எப்படி பயன்படுத்துவது, சுத்தம் செய்வது எப்படி, பாதுகாப்பாக வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
- முதல்முறை மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவதற்கு முன்பாக அதனை சுடு தண்ணீரில் சுமார் 6 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாகவும் இவ்வாறு கொதிக்கும் நீரில் அலச வேண்டும்.
- மென்ஸ்சுரல் கப் பொருத்துவதற்கு முன்பு மற்றும் பின்பு ஆகிய இரண்டு சந்தர்பங்களிலும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அதே சமயம், கப் சேதமடைந்ததாக இல்லாமல், அதில் அழுக்கு மற்றும் கிருமி தொற்று இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
- முதல் முயற்சியிலேயே மென்ஸ்சுரல் கப்-ஐ சரியாக பொருத்திவிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதற்கு சில காலம் தேவைப்படும். ஒருசில முயற்சிகளில் சரியாக பொருத்தலாம். ஒருவேளை தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டீர்கள் என்றால் குளிக்கும் சமயத்திலேயே இதனை பொருத்துவதற்கு முயற்சி செய்யலாம்.
- ஒவ்வொரு பெண்ணின் உடலும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டது. அதைப் போலவே ஒரு பெண்ணின் வயது, உதிரப் போக்கின் அளவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மென்ஸ்சுரல் கப் அளவு மாறும்.