லட்சங்களில் பணம் செலுத்தி விலையுயர்ந்த செல்போனை ஆர்டர் செய்த பெண்! கொரியர் பார்சலை திறந்த போது கிடைத்த ஏமாற்றம்
சீனாவில் ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த லியு என்ற இளம்பெண், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மொடல் செல்போனை வாங்க முடிவு செய்தார்.
இதை தொடர்ந்து செல்போனை வாங்குவதற்காக ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 231 ரூபாயை செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு கொரியரில் ஒரு பார்சல் வந்தது. தனக்கு பிடித்த செல்போன் தான் அதில் இருக்க போகிறது என எதிர்பார்த்து அதை பிரித்திருக்கிறார் லியு.
அப்போது தான் அவருக்கு ஏமாற்றமும், அதிர்ச்சியும் காத்திருந்தது.
அதாவது உள்ளே செல்போனுக்கு பதிலாக ஆப்பிள் ஜூஸ் இருந்திருக்கிறது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் செல்போன் நிறுவனம் மற்றும் கொரியர் நிறுவனம் விசாரணை நடத்தி வருகின்றன.
