ஐடி ஊழியர் கடத்தல் வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
கொச்சியில் IT ஊழியர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக லட்சுமி மேனன் மூன்றாவது குற்றவாளியாக பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.
அந்த இளைஞர் பப்பில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் லட்சுமி மேனனுடன் இருந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகியோர் ஏற்கெனவே எர்ணாகுளம் டவுன் வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, பொலிஸார் லட்சுமி மேனனை விசாரணைக்கு அழிக்க உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லட்சுமி மேனன் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். கும்கி, சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, வேதாளம் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் ரோந்த் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேலும்தீவிரமாக நடைபெறவிருக்கிறது. பிரபல நடிகை தொடர்பாக இவ்வாறு குற்றச்சாட்டு எழுப்பப்படுவது சினிமா உலகிலும், பொதுமக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Lakshmi Menon news, IT employee kidnapping Kochi, Lakshmi Menon police case, Kumki actress controversy, Lakshmi Menon investigation, Kochi abduction case 2025, Lakshmi Menon latest update, Ernakulam police arrest, Tamil actress legal trouble, Lakshmi Menon scandal