அபிராமி பேசியது முட்டாள்தனம்! கலாஷேத்ரா விவகாரத்தில் கொந்தளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
கலாஷேத்ரா விவகாரத்தில் நடிகை அபிராமி பேசியது முட்டாள்தனமானது என செய்தியாளர்கள் சந்திப்பில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கலாஷேத்ரா விவகாரம்
கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு பயிலும் மாணவிகள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பில் ஊடகத்திடம் ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம், பேராசிரியர் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்.
லஷ்மி ராமகிருஷ்ணன் விளாசல்
அவர் ஆதரவாக பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில் நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் அளித்த நேர்காணலில், 'இந்த விவகாரம் தொடர்பாக அபிராமி பேசியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் maturity இல்லாமல் பேசிவிட்டார். இந்த விடயத்திற்கு எல்லாம் ஆதாரம் வைத்துக் கொண்டா மாணவிகள் புகார் கொடுக்க முடியும்? அவங்க பேசியது ரொம்பவே முட்டாள்தனமானது.
உணர்ச்சிவசப்பட்டு இந்த விவகாரத்தில் அபிராமி voice out பண்ணிட்டாங்கன்னு தான் நினைக்கிறேன். அவர் பேசியது ரொம்ப ரொம்ப தப்பு, மாணவிகள் மட்டுமின்றி மாணவர்கள் கூட தங்களுக்கும் அங்கே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறி இருக்கிறார்கள்.
நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட பல இடங்களில் இளம் பெண்களும், பெண் குழந்தைகளும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை சாதி, மத பிரச்சனையாக பார்க்கக் கூடாது. வக்கிர மனநிலைக்கு எதிரான போராகவே இந்த விடயத்தை பார்க்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.