சிம்லாவில் சிவன் கோவில் இடிந்து விழுந்ததில் நேர்ந்த பெரும் சோகம்
கனமழையால் சிம்லாவில் சிவன் கோவில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் பெய்த கனமழையால் சிவன் கோவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்தார்.
சம்மர் ஹில் பகுதியில் உள்ள கோவிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கினர். ஹிமாச்சல் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) அதிகாரிகள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
himachalwatcher
சவான் மாத பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிவன் கோயில் இடிந்தபோது சுமார் 50 பேர் இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்னும் சிக்கியுள்ள மக்களை மீட்க உள்ளூர் நிர்வாகம் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் கூறினார்.
சிவன் கோயில் இடிந்து விழுந்த சம்பவத்தில் இருந்து இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோவில் இடிந்து விழுந்த இடத்தை இமாச்சல பிரதேச முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பியாஸ் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தின் சோலனில் உள்ள ஒரு கிராமத்தில் மேக வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். ஜடோன் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆறு பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்துகள் மற்றும் லொறிகள் ஸ்தம்பித்தன. சிம்லா-சண்டிகர் சாலை உட்பட பல சாலைகள் மூடப்பட்டன. சோலான் கோட்டி அருகே சாக்கி மோர் என்ற இடத்தில் சாலையின் இருபுறமும் ஏராளமான கனரக வாகனங்கள் சிக்கின.
IE Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |