பசுவதையால் தான் கேரளாவுக்கு நிலச்சரிவு.., பாஜக முன்னாள் MLA சர்ச்சை பேச்சு
கேரள மாநிலத்தின் வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் என்று பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா சர்ச்சையாக பேசியுள்ளார்.
கோர நிலச்சரிவு
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344 -ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதுவரை 9328 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பாஜக முன்னாள் MLA பேசியது
இந்நிலையில், கேரளாவில் பசுவதை காரணமாக தான் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்று பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகம் ஒன்றில் பேசுகையில், "கடந்த 2018 -ம் ஆண்டு முதல் பசுவதை நடைபெறும் பகுதிகளில் இந்த மாதிரியான சோக சம்பவங்கள் நடைபெறுவதை நாங்கள் கவனித்து கொண்டிருக்கிறோம்.
கேரளாவில் இதனை நிறுத்தாவிட்டால் இது மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கும். அதே போல, உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
ஆனால், அங்கு இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவதில்லை" என்று தெரிவித்தார். இவரின் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |