அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் மூர்க்கத்தனமானவர்கள்: பிரித்தானிய துருப்புகளை மிரட்டிய தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானை துப்பாக்கி முனையில் கைப்பற்றிய தாலிபான்கள் பிரித்தானிய துருப்புகளை மிரட்டி வெளியேற கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் 34 பிராந்தியங்களில் பெரும்பாலானவற்றை சரணடைய வைத்து, இறுதியில் மொத்த ஆட்சி அதிகாரங்களையும் தாலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது.
தாலிபான்கள் ஷரியா சட்டத்தை பின்பற்றியே ஆட்சியை முன்னெடுக்க இருப்பதால், பொதுமக்களில் பலர் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாட்டு துருப்புகளை நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்க துருப்புகள் வெளியேறிய சில வாரங்களில் தாலிபான்கள் அசுர வேகத்தில் பெரும்பாலான மாகாணங்களை கைப்பற்றியது சந்தேகத்துடனே பார்க்கப்பட்டது. மட்டுமின்றி, இந்த முறை தாலிபான்கள் பேச்சுவார்த்தை மூலம் பல மாகாணங்களின் ஆதரவை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே தாலிபான்களின் இந்த அசுர வேக தாக்குதலுக்கு காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு தாலிபான் ஆதரவு போராளிகள் பலர் தற்போது இவர்களுடன் இணைந்து இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலும், இன்னும் சில வாரங்களில் அந்த போராளிகள் ஆப்கானிஸ்தானுக்கு வர இருப்பதாகவும், அவர்கள் மிக கொடூரமானவர்கள் எனவும் மூர்க்கத்தனமானவர்கள் எனவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பிரித்தானிய துருப்புகளை தாலிபான்கள் மிரட்டியதாகவும், நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற கட்டாயப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தாலிபான்களுக்கு ஆதரவளித்துள்ள அந்த வெளிநாட்டு போராளிகள் யார் எனவும் அவர்கள் முன்னாள் ஐ.எஸ் தீவிரவாதிகளா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
மேலும், தற்போதைய பரபரப்பான சூழல் கட்டுக்குள் வந்த பின்னர், இந்த வெளிநாட்டு போராளிகள் தொடர்பில் தகவல் வெளிவரும் என்றே நம்பப்படுகிறது.