லாரி எலிசன், முகேஷ் அம்பானி உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் ஒரு நாளில் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்
உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள் என பட்டியல் இட்டால், அதில் இதுவரை எலோன் மஸ்க் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
ஒரு நாள் வருமானம்
லாரி எலிசனின் ஒரு நாள் வருமானம் என்பது அம்பானி மற்றும் அதானியின் மொத்த நிகர மதிப்பை விட அதிகம் என்றே கூறுகின்றனர். செப்டம்பர் 10ம் திகதி ஆரக்கிள் பங்கு விலை 40 சதவீதம் அதிகரித்தது.
இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 948 பில்லியன் டொலர் என பதிவானது. அதேவேளை ஒரே நாளில் லாரி எலிசனின் சொத்து மதிப்பில் 100 பில்லியன் டொலர் அதிகரித்தது.
இதனால் எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் டொலர் என அதிகரித்து, உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தில் இருந்து டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கை பின்னுக்கு தள்ளியது.
செப்டம்பர் 10ம் திகதி எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர் என இருந்தது. இருப்பினும், எலிசன் ஒரு நாளில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை கணக்கிடுவது கடினம் என்றே கூறுகின்றனர்.
அவரது வருவாய் மொத்தம் பங்கு விலைகளில் ஏற்படும் மாற்றம், ஈவுத்தொகை உள்ளிட்டவைகளில் இருந்தே வருகிறது. ஜூன் 2025ல் அதானி குழுமத்தின் பங்கு விலைகள் அதிகரிக்க, ஒரே நாளில் சுமார் 5.6 பில்லியன் டொலர் தொகை அவரது சொத்து மதிப்பில் அதிகரித்தது.
இதுவே, ஒரே நாளில் அதானி சம்பாதித்த பெரும் தொகை என கூறப்படுகிறது. ஆனால், லாரி எலிசன் ஒரே நாளில் 100 பில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார். இதேப் போன்றே, சுமார் 104 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ள முகேஷ் அம்பானியும் பங்கு விலைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாகவே வருவாய் ஈட்டுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |