மீண்டும் இலங்கை அணிக்காக திரும்பும் மலிங்கா! டி20 உலகக்கிண்ணம் இலக்கு..நியமித்த வாரியம்
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, இலங்கை டி20 அணிக்கு ஆலோசகராக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலிங்கா
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடருக்கு முன்பாக, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா (Lasith Malinga) இலங்கை அணிக்கு மீண்டும் திரும்புகிறார்.

இம்முறை அவரை வேகப்பந்துவீச்சு ஆலோசகர் பாத்திரத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக மலிங்கா, வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி வரை என ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு நீடிக்கும்.
2026 உலகக்கிண்ணத் தொடருக்கு இலங்கை அணியைத் தயார்படுத்தும் நோக்கில், இந்த நியமனமானது ஒரு குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |