முடிவுக்கு வரும் 20 ஆண்டு போர்.. பிரபல நாட்டிலிருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் பெரிய இராணுவத் தளமான பாக்ராம் விமானத்தளம் ஆப்கான் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க மற்றும் நேட்டோவின் கடைசி படைகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானத்தளத்தை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போர் காரணமாக ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள், தற்போது ஆப்கானிஸ்தானின் முக்கிய தளத்தை விட்டு வெளியேறியுள்ளன.
செப்டம்பர் 11ம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிடும் என்று ஜனாதிபதி ஜோ டைபன் தெரிவித்துள்ளார்.
சுமார் 2,500 முதல் 3,500 அமெரிக்க படைகள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருப்பதாக கூறப்படுகிறது, அவர்கள் 7,000 வெளிநாட்டு படைகளுடன் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் சர்வதேச விமான நிலையத்தை பாதுகாப்பதே ஒருங்கிணைந்த படையின் மீதமுள்ள பணிகளில் ஒன்றாகும்.