வாக்னர் தலைவர் இறப்பதற்கு முன்.. வைரலாகும் கடைசி வீடியோ காட்சிகள்
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட அவரது கடைசி காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.
வாக்னர் தலைவர் மரணம்
ரஷ்யாவின் Tver பிராந்தியத்தில் உள்ள போலோகோவ்ஸ்கி மாவட்டத்தில் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்ததாக கூறப்படும் எம்ப்ரேயர் 600 வணிக ஜெட் விமானம் தரையில் விழுந்து சில தினங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் உடன் சேர்த்து விமானத்தில் பயணம் செய்த 10 உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்ய அதிகாரிகளால் மூலக்கூறு மரபணு ஆய்வுகள் எல்லாம் நடத்தப்பட்டு விமான விபத்தில் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
விமானம் விபத்துக்குள்ளாகி 24 மணி நேரம் கழித்து எவ்ஜெனி பிரிகோஜின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கலும் தெரிவித்து இருந்தார்.
வெளியான கடைசி வீடியோ
இந்நிலையில் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட அவரது கடைசி காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது, SUV ரக வாகனத்தில் ஆப்பிரிக்காவை சுற்றித் திரியும் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின், அதில் தன்னுடைய இருப்பு குறித்து வெளியாகி வந்த வதந்திகளை பற்றி பேசி இருப்பதுடன், தான் நன்றாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
❗️ The last video of Prigozhin
— NEXTA (@nexta_tv) August 31, 2023
He drove around Africa in an SUV with a window for return fire. Ironically, in the recording he talked about the rumors of his liquidation - assured that everything was fine.
"For those discussing whether I'm alive or not, how I'm doing... It's… pic.twitter.com/97nOTZIUO3
அத்துடன் நான் எவ்வாறு இருக்கிறேன், உயிருடன் உள்ளேனா இல்லையா என்று பேசுபவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன், 2023ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் 2ம் பாதியில் நான் ஆப்பிரிக்காவில் உள்ளேன்.
என்னுடைய வருவாய், வாழ்க்கை என பலவற்றையும் விவாதிப்பவர்களுக்கு உண்மையாகவே நான் நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பேசியுள்ள இந்த வீடியோவின் மெட்டா விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |