அரசு மரியாதையுடன் மறைந்த ரத்தன் டாடாவுக்கு இறுதிச்சடங்கு.., அரசு அறிவிப்பு
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. அவரது மறைவையொட்டி இன்று (ஒக்டோபர் 10) ) ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடலானது இன்று காலை 10.30 மணி முதல் மும்பை நரிமன் பகுதியில் உள்ள தேசிய கலை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாலை 3.30 மணியளவில் அளவில் அவரது உடல் வோர்லி மயானத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கின் போது இந்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |