லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார்: அடுத்து என்ன நடக்கும்?
லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் குரல் வலுக்கத் துவங்கியுள்ளது.
அவருக்கு எதிராக கடிதங்கள் கொடுக்க 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவருக்கு பதிலாக லிஸ் ட்ரஸ்ஸை பிரதமராக தேர்வு செய்தனர்.
ஆனால், அவர் பொறுப்பேற்ற நேரம் பிரித்தானியா பொருளாதாரத்தில் தடுமாற, அதை எதிர்கொள்ள லிஸ் ட்ரஸ் அமைச்சரவை தடுமாறி வருகிறது.
இந்நிலையில், லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் குரல் வலுக்கத் துவங்கியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், லிஸ் ட்ரஸ் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறும் கடிதங்களை கன்சர்வேட்டிவ் கட்சி கமிட்டித் தலைவரிடம் தயாராக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தில் லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவிலியிலிருந்து அகற்றவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், அப்படி லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினால், அது பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும் என்று கூறி வாதம் முன்வைத்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி கமிட்டித் தலைவரான Graham Brady, லிஸ் ட்ரஸ்ஸுக்கும், புதிதாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெரமி ஹண்டுக்கும் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னொரு வாய்ப்புக் கொடுக்கலாம் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.