லேஸ் சிப்ஸ் தயாரிப்பில் பாமாயிலுக்கு பதில் வேறு எண்ணெய் பயன்படுத்த முடிவு.. ஏன் தெரியுமா?
லேஸ் சிப்சை பாமாயில் பயன்படுத்தாமல் சூரியகாந்தி எண்ணெய் கொண்டு தயாரிக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பாமாயிலுக்கு பதில் வேறு எண்ணெய்
பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் உருளைக்கிழங்கு சிப்ஸ் பிராண்டான லேஸ் சிப்ஸ் இந்தியாவில் மிகவும் பிரமபலமாக இருக்கிறது. இந்த லேஸ் சிப்சை பாமாயில் கொண்டு தயாரித்து வருகின்றனர்.
பொதுவாகவே பாமாயில் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் ஆரோக்கியமற்றது என்று இந்திய மக்களிடம் நம்பப்பட்டு வருகிறது.
இதனால், லேஸ் சிப்சை பாமாயில் பயன்படுத்தாமல் சூரியகாந்தி எண்ணெய் கொண்டு தயாரிக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் தயாரிக்கப்படும் லேஸ் சிப்ஸ்களில் உப்பின் அளவையும் குறைக்க முடிவு செய்துள்ளது. அதாவது 2025 -ம் ஆண்டிற்குள் 1 கலோரிக்கு 1.3 மில்லி கிராம் அளவுக்கு மேல் சோடியம் இருக்க கூடாது என்றும் முடிவெடுத்துள்ளது.
பொதுவாகவே, சூரியகாந்தி எண்ணெய்யை விட பாமாயில் விலை குறைவு என்பதால் இந்தியாவில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் பாமாயில் கொண்டே தயார் செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |