இஸ்ரேலியர் என்பதால் ஹாலிவுட்டின் பிரபல நடிகையின் படத்திற்கு தடை! அதிரடியாக அறிவித்த நாடு
இஸ்ரேலிய நடிகையான கேல் கடோட்டின் திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிட லெபனான் தடை விதித்துள்ளது.
கேல் கடோட்
ஹாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவர் கேல் கடோட் (39). இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றினார்.
காஸா மற்றும் லெபனானில் போர்களைத் தூண்டிய சமயத்தில் இருந்தே இவர், இஸ்ரேலின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
திரையிட தடை
இந்த நிலையில் கேல் கடோட் நடிப்பில் Snow White என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
ஆனால், லெபனான் நாட்டில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டை தளமாகக் கொண்ட விநியோகஸ்தர் இதுகுறித்து பேசியுள்ளார்.
கேல் கடோட் நீண்ட காலமாக லெபனானின் இஸ்ரேல் புறக்கணிப்பு பட்டியலில் இருப்பதாகவும், அவர் நடித்த எந்த திரைப்படமும் இதுவரை லெபனானில் வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |