தமிழகத்தை உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு
தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி தவறான வழியில் பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.
அவர் மாணவிகளிடம் பேசிய போன் உரையாடல் வெளியாகி தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும் தான் குற்றவாளிகள் என சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
குற்றப்பத்திரிகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நிர்மலாதேவி வழக்கில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கு தொடர்பில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |