15 மணிநேரமாக வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை! பட்டாசு சத்தத்தால் பயம்..போராடும் வனத்துறையினர்
தமிழக மாவட்டம் நீலகிரியில் வெடி சத்தத்திற்கு பயந்து வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நாயை விரட்டிய சிறுத்தை ஒன்று, தீபாவளி பட்டாசு சத்தத்தினால் பயந்து வீட்டிற்குள் பதுங்கியது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சிறுத்தை பதுங்கி இருக்கும் வீட்டிற்கு விரைந்தனர்.
சிறுத்தை 15 மணிநேரமாகியும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. இதனால் வனத்துறையினர் மூன்று சிசிடிவி கமெராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கமெராவை பயன்படுத்தி, சிறுத்தையின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்
. அதனை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண் இதுகுறித்து கூறும்போது, இன்று இரவுக்குள் சிறுத்தை வெளியேறும் என நம்புகிறோம். சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கமெரா மூலம் கண்காணித்து வருகின்றோம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |