புடின் இறந்தால் மகிழ்ச்சியடைவோம்: வெளியரங்கமாக தெரிவித்த ஒரு நாட்டின் தூதர்
புடின் இறந்தால் மகிழ்ச்சியடைவோம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர்.
உக்ரைன் போர் உருவாக்கியுள்ள வெறுப்பு
புடின் இறந்தால் மகிழ்ச்சிதான் என்று கூறும் பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரான Vadym Prystaiko, யாருமே ஒருவர் சாகவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். ஆனால், இந்த குறிப்பிட்ட நபர் இறந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என்று கூறியுள்ளார்.
AFP
புடின் இறந்தால் அல்லது அவருக்கு பதிலாக வேறொருவர் ரஷ்யாவின் தலைவராக பொறுப்பேற்றால், அவர் எப்படி இருப்பார் என்பது குறித்த ஒரு கேள்வி எழுந்தபோது, பலரும் அடுத்து ரஷ்யாவின் தலைவராக பொறுப்பேற்பவர் மோசமானவராக இருப்பார் என்றுதான் நினைக்கிறார்கள்.
ஆனால், உங்களுக்கு அது எப்படி தெரியும்? ஏன் அப்படி நினைக்கவேண்டும்? அடுத்த தலைவர் நியாயமான ஒருவராக, அல்லது புடினைவிட நியாயமானவராக ஏன் இருக்கக்கூடாது என்கிறார் Vadym Prystaiko.