லிபியாவில் 5,000 பேர் பலி? 10,000 பேர் மாயமானதாக அச்சம்
லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 2,000 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
புயலின் கோர தாண்டவம்
டேனியல் புயல் லிபியாவை தாக்கியதில் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது. டெர்னாவில் இருந்து 1,000 உடல்கள் மீட்கப்பட்டதாக கிழக்கு நிர்வாக அமைச்சர் கூறினார்.
Gobierno de Libia via AP
ஆனால், 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக மூத்த மருத்துவர் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
அதே சமயம் உள்ளூர் தொலைக்காட்சி மேற்கோள் காட்டிய கிழக்கு லிபியா அதிகாரிகள் 5,000க்கும் அதிகமான எண்ணிக்கையை மதிப்பிடுகின்றனர்.
Libya Al-Hadath/Reuters
10,000 பேர் மாயமானதாக அச்சம்
மேலும் குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நகரின் இரு மாவட்டங்களில் ஒன்றில் 1,700 பேர் இறந்துள்ளதாகவும், மற்றொன்றில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் Wahda மருத்துவமனையின் இயக்குநர் முகமது அல்-காபிசி தெரிவித்தார்.
Ali Al-Saadi/Reuters
பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, மக்கள் அவர்களைப் பார்த்து காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண முயன்றது சோகத்தை ஏற்படுத்தியது.
The Press Office of Libyan Prime Minister/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |